தப்பித்த வைகோ … சிக்கிய திருமா – எத்தனைத் தொகுதிகளில் உதயசூரியன் ?

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (15:49 IST)
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக மற்றும் விசிக வுக்கு திமுக அழுத்தம் கொடுத்த நிலையில் மதிமுக அதை மறுத்துள்ளது.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடத்திய திமுக அவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது. அதையடுத்து மதிமுகவுக்கு 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா தொகுதி ஒதுக்கியுள்ளனர். இரண்டு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருப்தியடைந்துள்ளன. ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் ஸ்டாலின் மற்றொரு நிபந்தனை விதித்திருந்தார்.

விசிக மற்றும் மதிமுக ஆகியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சீட்களில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் திமுகவின் சின்னமான உதயசூரியனிலே போட்டியிட வேண்டும் என திமுகக் கூறியிருந்தது. அதற்கு இரண்டு கட்சிகளுமே சம்மதம் தெரிவிக்காத நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துக் கூறுமாறு வேண்டுகோள் விடுத்தது திமுக. இதனால் இருக் கட்சிகளும் கட்சி முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியது.’

மதிமுகவைப் பொறுத்தவரை ‘திமுகவை எதிர்த்துத்தான் மதிமுகத் தொடங்கப்பட்டது. அப்போதையக் காலத்தில் அதிக உதயசூரியன் சின்னத்தை கேட்டு மதிமுக வழக்குக் கூட தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணியில் வைத்துள்ள நிலையில், நாம் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமா? ’ என உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் வைகோ அந்த முடிவுக்கு உடன்பட முடியாது என ஸ்டாலினிடம் இன்று நடத்திய சந்திப்பில் கூறியதாகத் தெரிகிறது. இதனால் மதிமுகவின்  முடிவை திமுக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கானத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

ஆனால் விடுதலை சிறுத்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கேட்ட 2 சீட்களைக் கொடுத்ததே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் என்பதால் இன்னமும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் அதை மீண்டுமொரு முறைக் கூறியுள்ளார். இதனால் விசிக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

விசிக தலைவர் திருமா வளவன் இதற்கு முன்னர் ஒருமுறை திமுக சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்