திமுக தலைமையிலானக் கூட்டணியில் மதிமுகவுக்கு 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா தொகுதி ஒதுக்கியுள்ளனர். இரண்டு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருப்தியடைந்தாலும் ஸ்டாலின் விதித்த மற்றொரு நிபந்தனையால் அதிருப்தியடைந்துள்ளனர். அது திமுகவின் சின்னமான உதயசூரியனிலேயே மதிமுக போட்டியிடவேண்டும் என்பது.
இதனால் அதிருப்தியடைந்துள்ள வைகோ மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ‘திமுகவை எதிர்த்துத்தான் மதிமுகத் தொடங்கப்பட்டது. அப்போதையக் காலத்தில் அதிக உதயசூரியன் சின்னத்தை கேட்டு மதிமுக வழக்குக் கூட தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணியில் வைத்துள்ள நிலையில், நாம் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமா? என யோசிக்கிறது மதிமுக.