வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தில் தேமுதிக கட்சி-விஜயகாந்த் கடிதம்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (16:13 IST)
நாளை 14 செப்டம்பர் 2023 , தேமுதிக தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 19-ஆம் ஆண்டு துவங்குவதையொட்டி,   தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,

‘’பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்து நாளை (14.09.2023) 19 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஜாதி, மதம், ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம் ஒரே இனம் என்ற கோட்பாட்டோடு சனாதானத்தை கடைபிடிக்கும் கட்சியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதே பாணியில் தான் எப்போதும் செயல்படும்.

கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை கொண்டுதான் கட்சியை வளர்த்து வருகிறோம். இதற்கு நமக்கு கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், இரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள்தான் காரணம்.

தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே,வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். தமிழக மக்கள் நம் இயக்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வண்ணம் செயல்படுவோம். இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்கிற கொள்கையின் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை
வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்