மனைவி பிரேமலதாவுடன் வாக்களித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (11:27 IST)
சென்னையில் சாலிகிராமம் வாக்கு சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் வந்து வாக்களித்தார்.
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை  ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலை முதலே உற்சாகமுடன் வாக்களித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று காலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் வந்து வாக்களித்தார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரப்புரை மற்றும் பிரசாரக் கூட்டங்கள் தீவிரமாக நடந்து வந்தன. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவர்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட  நிலையிலும் வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்