எனக்கு ஓட்டு இல்லையாம் – ஆவேசமான நடிகர் ரமேஷ் கண்ணா !

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (11:15 IST)
நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக இதுவரை சில வாக்குச்சாவடிகளில் 10 முதல் 15 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். திரைநட்சத்திரங்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோரும் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ ஒரே வீட்டில் இருக்கும் எனது மனைவிக்கு ஓட்டு இருக்கிறது. ஆனால் எனக்கு இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அது யார் தவறு.. நிலைமை இப்படி இருக்கும் போது தேர்தல் ஆணையம் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என பிரச்சார விளம்பரம் வெளியிடுகிறது’ என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்