பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு சார்பில் மானிய விலை பொருட்கள் விற்பனை செய்வது வழக்கமாக உள்ள நிலையில், பல நிர்வாக கோளாறுகள் காரணமாக இந்த முறை அங்காடிகள் அமைக்கப்படவில்லை. ஆனால் பட்டாசு சிறப்பு விற்பனை அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் ரெங்கசாமி “நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை, காய்கறிகள், பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது.
பாண்லே நிறுவனத்திற்கு 102 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் வழங்கிய 7500 பயனாளிகளுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K