பாஜகவில் இணைந்த அஜித், விஜய் பட இயக்குனர்

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (08:29 IST)
தமிழக பாஜகவில் கடந்த சில மாதங்களாக திரையுலகைச் சேர்ந்த பலரும் இணைந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். காயத்ரி ரகுராம், கௌதமி, கங்கை அமரன்,  உள்பட பலர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடிகை ராதாரவியும் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அஜித், விஜய், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் இயக்கிய இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்துள்ளார். நேற்று அவர் சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார். அவரிடம் இருந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்ட இயக்குனர் பேரரசு பாஜகவின் வளர்ச்சிக்காக பாடுபடப் போவதாக கூறியுள்ளார் 
 
இயக்குனர் பேரரசு அவர்கள் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த திருப்பதி உள்பட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் பேரரசு பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் திடீரென அவர் பாஜகவில் இணைந்து உள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்