பிளஸ் 2 தேர்வு: கூலித் தொழிலாளி மகள் நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை..!

Webdunia
திங்கள், 8 மே 2023 (13:36 IST)
பிளஸ் டூ தேர்வில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 600க்கு  600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 
 
பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று காலை வெளியான நிலையில் திண்டுக்கல் மாணவி நந்தினி பிளஸ் 2 பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பாதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இவர் கூலி தொழிலாளியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பை தனது வரலாற்று சாதனையாக நினைத்ததால் தான் இது சாத்தியம்ஆயிற்று என்றும் தனக்கு இந்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்க தனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம் என்றும் பேட்டி அளித்துள்ளார். 
 
600க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினி சிஏ படிக்க ஆசைப்படுவதாகவும், சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆக வேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்