அந்த பையன் என் பேரன் மாதிரி..! – வருத்தம் தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன்!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (12:57 IST)
சிறுவனை செருப்பை கழட்டிவிட சொன்னதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

முதுமலையில் உள்ள யானைகள் சரணாலயத்தில் புத்துணர்வு முகாமை தொடங்கி வைக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றுள்ளார். முகாமை தொடங்கி வைத்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்த அமைச்சர் காலில் செருப்பு பலமாக மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டிவிடும்படி கூற அந்த சிறுவனும் கழட்டி விட்டுள்ளான். இந்த சம்பவத்தை தொடர்ந்து பலர் சிறுவனை செருப்பை அகற்ற சொன்னது தவறு என கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னது உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதல்ல. பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால்தான் சிறுவனை அழைத்தேன். எனது பேரனை போலதான் நான் அந்த சிறுவனை நினைத்தேன்.” என்று கூறியுள்ள அவர் தனது செயலுக்காக வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்