என்னது ரெய்டா? நான் இப்போதான் தூங்கி எழுந்தேன் - திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (12:48 IST)
ஜெயாடிவி மற்றும் சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது பற்றி தீண்டுக்கல் சீனிவாசன் வேடிக்கையான பதிலை கூறியுள்ளார்.


 

 
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு, சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட அலுவலங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 
 
சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. விபிபி பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து கேட்கப்பட்டது. 
 
அதற்கு அவர், என்னது ரெய்டு நடக்கிறதா? நான் இப்போதான் தூங்கி எழுந்தேன். இன்னும் டிவி பார்க்கவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்