”ஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர்..” இருவரின் திட்டம் தான் அது!! திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

Arun Prasath
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (10:40 IST)
18 எம்.எல்.ஏக்களின் வாழ்க்கையை கெடுத்தவர் முக ஸ்டாலின் தான் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல், நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

தற்போது இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இது குறித்து நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ”இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என கூறினார்.

மேலும், 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோனதற்கு டிடிவி தினகரன் தான் காரணம் என புகழேந்தி கூறியுள்ளதை குறித்து கேட்டபோது, ”18 எம்.எல்.ஏக்களின் வாழ்க்கையை கெடுத்தது தினகரன் மட்டுமல்ல, ஸ்டாலினும் தான் காரணம். ஸ்டாலின் முதல்வராக வேண்டும், தினகரன் துணை முதல்வராக ஆகவேண்டும் என்பதற்காகவே திட்டம்போட்டு 18 எம்.எல்.ஏக்களின் வாழ்க்கையை கெடுத்தனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பியபோது, அதிகம் பேர் படிப்பதால் தான் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டதாக கூறினார். தாற்போது 18 எம்.எல்.ஏக்களின் வாழ்க்கையை கெடுத்தது தினகரன் மற்றும் ஸ்டாலின் இருவரின் திட்டம் தான் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்