ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அமோகமாக நடப்பதாக அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த தினகரன் தரப்பை சேர்ந்த பலரை கைதும் செய்துள்ளனர். ஆர்கே நகர் பகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000 முதல் 4000 வரை பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஓட்டுக்கு பணம் வழங்குவதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். வீடுகளுக்கு சென்று வலுக்கட்டாயமாக பணம் அளித்து ஓட்டு போடுமாறு வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் அணியினர் பணம் வழங்குவதாக ஓபிஎஸ் அணியினர் வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நன்றி: Vikatan
அந்த வீடியோவில் வீடுகளுக்கு சென்று ஓட்டுக்கு 4000 ரூபாய் வீதம் பணம் வங்குவது தெளிவாக உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்வதாக இந்த வீடியோவை ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளனர்.