ஜெ.மரணம் குறித்த சர்ச்சை: தினகரன் எடுத்த திடுக்கிடும் முடிவு

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (07:02 IST)
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையே உச்சகட்ட மோதல் நடந்து வரும் நிலையில் தற்போது ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாவும், தினகரனுமே காரணம் என்று திண்டுக்கல் சீனிவாசன் உள்பட ஒருசிலர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்



 
 
இந்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களில் அக்கறையுடன் சசிகலா, ஜெயலலிதாவை கவனித்த காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என்ற பிம்பத்தை போக்க தினகரன் பயன்படுத்தும் கடைசி அஸ்திரமாக இருந்த புகைப்படங்கள் இருக்கும் என்றும், புகைப்படங்களை வெளியிடும் முன்னர் பெங்களூர் சென்று சசிகலாவிடம் தினகரன் அனுமதி பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்