மதுகுடிப்போர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள்

Sinoj
புதன், 27 மார்ச் 2024 (19:24 IST)
வரும் மக்களவை தேர்தலில் மதுகுடிப்போர் சங்கம் போட்டியிடும் நிலையில், வித்தியாசமான கோரிக்கைகள் வைத்துள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ், திமுக, பாமக  உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிட்டன.
 
இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் மதுகுடிப்போர் சங்கம் போட்டியிடும் நிலையில், வித்தியாசமான கோரிக்கைகள் வைத்துள்ளது.
 
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் தமிழ்நாடு  மதுகுடிப்போர் சங்கம் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் தன் கழுத்தில் தாலி கயிறு அணிந்து வந்து வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
அப்போது தங்கள் சங்கம் சார்பில், கடல் நீரில் மதுபானம் தயாரிக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சின்டெக்ஸ் டேங்க்கில் குடிநீர் வேண்டும். மதுப்பிரியர்களுக்கு நம்பர் பிளேட் வேண்டும் என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்