வேட்பு மனு தாக்கல் நிறைவு..! மார்ச் 28-ல் மனுக்கள் மீது பரிசீலினை..!!

Senthil Velan

புதன், 27 மார்ச் 2024 (15:50 IST)
மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
 
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.
 
கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 
 
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்றும் அண்ணாமலை,  டிடிவி தினகரன் உள்ளிட்ட ஏராளமான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 856 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கலின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ: 33 மீனவர்கள் விடுதலை..! 3 மீனவர்களுக்கு சிறை..! உறவினர்கள் கொந்தளிப்பு..!!

மார்ச் 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படவுள்ளது. மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்