தொலைபேசியில் பேசிய ஜெயலலிதா ஏன் பொதுமக்களிடம் வாட்ஸ்ஆப்பில் பேசவில்லை?: காரணம் இருக்கு!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (10:01 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் மறுபிறவி எடுத்துள்ளதாக அவரது கையெழுத்துடன் ஒரு அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கை வந்ததில் சந்தோஷம் இருந்தாலும் அது ஜெயலலிதா வெளியிட்டது தானா என்ற சந்தேகமும் வந்தது.


 
 
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூட இதில் சந்தேகத்தை எழுப்பினார். முதல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமலும், இரண்டாவது அறிக்கையில் அவரது கையெழுத்து இருந்ததும் சந்தேகமாக பேசப்பட்டுது.
 
இந்நிலையில் அதிமுக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக விசாலாட்சி நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் கூறினார்.
 
முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் பேசும் அளவுக்கு குணமாகிவிட்டார் என்பதை அறிந்த அதிமுகவினர் சந்தோஷம் அடைந்தனர். ஆனால் அதில் சந்தேகமும் இருந்தது. முதல்வரால் தொலைபேசியில் பேச முடிகிறது என்றால் தமிழக மக்களிடம் வாட்ஸ்ஆப் மூலமாக பேசி தனது குரலை வெளியிட வேண்டியது தானே. அனைத்து சந்தேகத்துக்கும், வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாமே என மீண்டும் பேச ஆரம்பித்துள்ளனர்.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உண்மையிலேயே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினாரா என விசாரித்ததில், இல்லை என்ற தகவலே வருகிறது. முதல்வர் ஜெயலலிதா சுவாசிப்பதற்காக தொண்டையில் துளையிட்டு செயற்கை சுவாசம் கொடுத்து வருகின்றனர். ஒரு நாளைக்கு அவர் 8 மணி நேரம் தான் இயல்பாக சுவாசிக்கிறார், 16 மணி நேரம் செயற்கை சுவாசத்தில் தான் உள்ளார் என மருத்துவமனை வட்டார தகவல்கள் வருகின்றன.
 
இப்படி இருக்கும் போது முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டையில் செயற்கை சுவாசத்திற்காக பொருத்தப்பட்டிருக்கும் டியூப் இன்னமும் அகற்றப்படவே இல்லை என கூறப்படுகிறது. தொண்டையில் டியூப் இருப்பதால் அவர் பேசியிருக்க வாய்பே இல்லை என்கிறார்கள்.
 
தொண்டையில் இருக்கும் டியூப் அகற்றப்பட்டால் அந்த புண் ஆறுவதற்கே ஒருவாரம் ஆகும். அதன் பின்னர் தான் அவர் பேச முடியும் என மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த கட்டுரையில்