பிரதமர் நரேந்திர மோடி 2012-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது ஆதித்யா பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால் இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு பிரதமரின் பெயர் கருப்பு பண விவகாரங்களில் வந்திருக்கிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆதித்யா பிர்லா குழுமத்தில் நடந்த வருமான வரி சோதனையின் போது ஒரு மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மோடி லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது.
2012-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி குஜராத் முதல்வருக்கு 25 கோடி கொடுத்ததாக வெளிப்படையான பதிவு அந்த மடிகணினியில் உள்ளது. அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தது மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இது பற்றி வாய் திறக்கவில்லை. எனவே இவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது புயலை கிளப்பும்.