காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு

Webdunia
புதன், 27 மே 2020 (22:29 IST)
இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் பெண்களை ஏமாற்றிய  நகர் கோவில் காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இன்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி, இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதனை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர், பொறியியல் பட்டதாரி, மாணவி உள்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் காசி மீது, போக்சோ, கந்து வட்டி, பாலியல் வன்கொடுமை என பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் ,  காசி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆறு நாட்கள் போலீஸ் காவல் முடிந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் பெண்களை ஏமாற்றிய  நகர் கோவில் காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இன்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்