துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (17:09 IST)
துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
கடந்த 2018ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் குறித்து குருமூர்த்தி பதிவிட்ட கருத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கம் கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது
 
இந்த வழக்கில் குருமூர்த்தி ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார் என்றும், தனது பதிவையும் நீக்கிவிட்டார்' என அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று வாதிட்டார். 
 
இந்த நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்