இது குறித்து அண்ணாமலையின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள நோட்டீஸில் டி ஆர் பாலு மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களில் உறுதியாக உள்ளார். அதனால் அவர் 100 கோடி நஷ்ட ஈடு வழங்க மாட்டார், டி ஆர் பாலுவிடம் மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் டி ஆர் பாலு குறித்து எந்த ஒரு அவதூறு கருத்துக்களையும் அண்ணாமலை தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.