படத்தை பார்த்தால் கூட பயம் என்றால் அவர்தான் ஜெயலலிதா; தீபா டுவீட்

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (16:40 IST)
படத்தை பார்த்து கூட பயம் வருகிறது என்றால் அவர்தான் ஜெயலலிதா என்று தீபா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 
நாளை ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட உள்ளது. இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை இதற்காக எடப்பாடி அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ஜெ.தீபா ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்கும் அரசுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:-
 
அவர் என்றும் மக்கள் முதல்வர், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அம்மா என்ற சொல் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். கடைசியில் ஒன்று தெரிகிறது படத்தை பார்த்து கூட பயம் வருகிறது என்றால் அவர்தான் ஜெயலலிதா. அம்மாவின் உருவப்படத்தை திறக்கும் அரசுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்