பணப்பட்டுவாடாவில் தீபா அணி: மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும் ஆர்கே நகர் மக்கள்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (17:09 IST)
ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தாரளாமாக நடந்து வருவதாக அங்கிருந்து வரும் களத்தகவல்கள் கூறுகின்றன. அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் தர்ப்பு தான் அதிகமாக பணத்தை அள்ளி வீசுவதாக கூறப்பட்டு வந்தது.


 
 
டிடிவி தினகரன் தரப்பினர் வாக்காளர்களை கவர ஏகப்பட்ட பணத்தை இந்த தேர்தலில் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் மற்ற கட்சியினரும் ஓரளவுக்கு பணம் கொடுத்து தான் வருவதாக செய்திகள் வந்தனர். ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினர் மீது பணம் பட்டுவாடா செய்வதாக மாறி மாறி புகார் கூறினர்.
 
ஆனால் இந்த பணப்பட்டுவாடா புகாரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சிக்காமல் இருந்தார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்கிற அணுதாப ஓட்டுகளை நம்பி தான் இவர் தேர்தலில் போட்டியிடுவதாக பொதுவாக பார்க்கப்பட்டு வந்தார். ஆனால் தற்போது தீபா அணியினரும் வாக்காளர்களுக்கு 1000 முதல் 3000 வரை விணியோகம் செய்வதாக தகவல்கள் வருகின்றன.
 
வாக்களர்களுக்கு பணத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக தீபா அணியில் உள்ள பெண்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர் ஒருவரை தீபா அணியினர் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவரது கேமராவையும் பறித்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. தீபா அணியினரின் இந்த செயலை ஆர்கே மக்கள் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்களாம்.
அடுத்த கட்டுரையில்