ஜெ. பயன்படுத்திய பேனா போதும்; சொத்துகள் வேண்டாம் - தீபா உருக்கம்

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (13:07 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், நேற்று திடீரென ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். மேலும், தினகரனுக்கு எதிராகவும் அவர் கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில், ஜெ.வின் 69வது பிறந்த நாளை, அவரின் அண்ணன் மகள் தீபா, சென்னையில் உள்ள அவரது விட்டில், அவரின் ஆதரவாளர்களோடு இன்று கொண்டாடி வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “எனது சகோதரர் தீபக் பேசுவதில் ஏதோ அரசியல் உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. அவரின் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். எனது அத்தை ஜெ. வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு எனக்கும், அவருக்கும் சொந்தம் என அவர் கூறியுள்ளார். ஆனால், எனக்கு ஜெ.வின் சொத்துக்கள் மீது ஆர்வம் இல்லை. எனக்கு அவர் பயன்படுத்திய பேனாவே போதுமானது” எனக்கூறினார்.
 
மேலும், ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்படுவது பற்றி எந்த முடிவும்  எடுக்கவில்லை எனவும், ஆர்.கே.நகர் இடைத்தொகுதியில் நான் போட்டியிடுவேன். மேலும், இன்று மாலை சில முக்கிய அறிவிப்புகளை நான் வெளியிட இருக்கிறேன்” என அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்