ஜெ. பெயரை சொன்னால் ஓட ஓட விரட்டியடியுங்கள்: தீபா ஆவேசம்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (11:15 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இரண்டு அணிகளும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


 
 
இதில் அதிமுக சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியா மூன்று பேரும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நாங்கள் தான் என அவரது பெயரை கூறி வாக்கு கேட்டு வருகின்றனர்.
 
இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா என்னும் மாபெரும் தலைவர் போட்டியிட்டு வென்ற இந்த தொகுதியில் அவரது பெயரை சொல்லி அனுதாபம் தேடுபவர்களிடம் ஏமாந்துவிட கூடாது என தீபா கூறினார்.
 
மேலும், ஜெயலலிதாவின் பெயரை நான் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரை வைத்து அழகு பார்க்க வேண்டும் என உங்களுக்கு தெரியும். ஜெயலலிதா பெயரை கூறிக்கொண்டு யாராவது வாக்கு கேட்டு வந்தால் அவர்களை ஓட ஓட விரட்டியடியுங்கள், அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என கூறினார் தீபா.
அடுத்த கட்டுரையில்