நாளை ஒரு கோடி பேரை கொல்வோம்.. விநாயகர் சிலை கரைப்பு விழாவுக்கு வந்த மிரட்டல்..!

Siva

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (16:42 IST)
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கும் வேளையில், நகரில் பயங்கரவாத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் செய்தி வாட்ஸ்அப் மூலம் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வாட்ஸ்அப் செய்தியில், 34 வாகனங்களில் 400 கிலோ RDX வெடிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த வெடிபொருட்கள் மூலம் ஒரு கோடி மக்களை கொல்ல முடியும் என்றும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை குறிவைப்பதாகவும் அந்த செய்தி மிரட்டல் விடுத்துள்ளது.
 
"லஷ்கர்-இ-ஜிகாதி" என்ற பெயரில் வந்த அந்த செய்தியில், 14 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து, மும்பை காவல்துறையும், பாதுகாப்பு படைகளும் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்