தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (19:46 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 11,805   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 11,805   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,78,298    பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 23, 207    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 22,23,015  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 267   பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26, 571 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 793   பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை  5,26,614   ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 1,25, 215   பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தியாவில் சில மாதங்களாக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரொனாவால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 60,471 பேர் கொரொனாவால் பாதிப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 ஒரேநாளில் சுமார் 60,471  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரேநாளில் 2,726 பேர்  உயிரிழந்துள்ளதாகவும், ஒரேநாளில் சுமர் 1,17,525 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கொரொனா இரண்டாம் அலை பரவல் தொடங்கி சுமார் 75 நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்து மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்