குறைந்து வரும் கொரொனா பாதிப்பு...

செவ்வாய், 8 ஜூன் 2021 (17:05 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், கடந்த சில கொரொனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.

இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் 1,00,636 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இதுமேலும் குறையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அதில், அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும், தீபாவளி வரை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ரேசனில் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறினார்.

நேற்று ஒரே நாளில் 86,498 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.63 நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 1 லட்சத்திற்குக் கீழ் சென்றுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் அரசு கூறியுள்ள நெறிமுறைகளை கைக்கொண்டால் இத்தொற்றிலிருந்து விடுபடலாம் என சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்