தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை ஒழித்து மக்களைப் பாதுகாக்க மத்திய – மாநில அரசுகள் இணைந்து பாடுபட்டுக் கொண்டுள்ளன.
இந்நிலையில், பிரபல ஊடக ஒளிப்பதிவாளரான திரு. வேல்முருகன் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்து பிரபல ஊடகங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றன.
ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது படத்துடன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
அதில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறை மூலம் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்த்த ராஜ் டிவி மூத்த ஒளிப்பதிவாளர் திரு வேல்முருகன் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் ஊடக நண்பர்கள் செய்தி சேகரிக்க செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டுமென அனைவருக்கும் முதல்வர் அறிவுறித்தியுள்ளார்.