பிரியாணியை வீட்டில் இருந்த அனைவரும் பகிர்ந்து சாப்பிட்ட நிலையில், ராஜ்குமாரின் மனைவி சுவாதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரியாணியை சோதனை செய்து பார்த்தபோது அதில், இறந்த நிலையில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பின்னர் ராஜ்குமார், அவரது மனைவி சுவாதி, இரண்டு மகன்கள் மற்றும் ராஜ்குமாரின் தாயார் ஜெயந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.