மிக்ஜாம் புயல் : பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து அரசு உத்தரவு

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (18:50 IST)
மிக்ஜாம் புயல்  மீட்பு  நடவடிக்கையாக   மழைப்பாதிப்பு நிவாரண பணிகளுக்கு பகுதிவாரியாக அமைச்சர்களை தமிழக அரசு  நியமித்துள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் வெள்ளக் காடாகியுள்ளதால் மக்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தன்னார்வ  நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றன.

இந்த நிலையில், மிக்ஜாம் தீவிர புயல் சென்னையில் இருந்து மெதுவாக வட திசையில் நரகத் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த 6 மணி   நேரத்தில் மழை குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல்  மீட்பு  நடவடிக்கையாக   மழைப்பாதிப்பு நிவாரண பணிகளுக்கு பகுதிவாரியாக அமைச்சர்களை தமிழக அரசு  நியமித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் தெரிவித்துள்ளதாவது: வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டு உதவிகள் செய்வோம்" என
மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னையில், அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் ,அமைச்சர் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே என், நேரு ஆகியோரும், காஞ்சிபுரத்தில், அமைச்சர் சு, முத்துச்சாமியையும், தாம்பரத்தில் அமைச்சர் ர,.சக்கரபாணியும், ஆவடியில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வமும், கத்திவாக்கம் மணலி  எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், வில்லிவாக்கம்- அண்ணா நகர்- அம்பத்தூர்- எம்ஜிஆர் நகர்- கே.கே நகர் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷும், வேளச்சேரி - மடிப்பாக்கத்தில், அமைச்சர் எ.வ. வேலுச்சாமியும், சோழிங்கநல்லூர்- பெருங்குடி- பெரும்பாக்கத்தில் அமைச்சர் சி.வே கணேசனும், திருவள்ளூரில் அமைச்சர் பி.மூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்