வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (11:24 IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதைஅடுத்து தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒரு சில இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்