வங்கக்கடலில் நாளை மறுநாள் புயல்.. 5 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (10:09 IST)
வங்கக் கடலில் நாளை மறுநாள் புயல் உருவாகும் என்றும் இதன் காரணமாக ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதை அடுத்து நாளை மறுநாள் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் புயல் சின்னம் தோன்றியுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்