தமிழகத்தில் பாதிப்பு நிலவரம் ...அமைச்சர்ன் தகவல்

சனி, 26 ஜூன் 2021 (20:43 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்று 5415 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,415 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கொரொனா உச்சத்தில் காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கான பரிசோதனைகள் தற்போதும் செய்யப்படுகின்றன. இப்போது, தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்