சட்டப்பேரவையை ஒத்திவைத்து அமைச்சரவையை கூட்டும் முதல்வர்? – முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

வியாழன், 24 ஜூன் 2021 (12:03 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாலை அமைச்சரவை கூடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்திற்கு பிறகு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டப்படுகிறது. சட்டசபையில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அமைச்சரவையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும், மேலும் பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்