முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் !

வியாழன், 24 ஜூன் 2021 (18:33 IST)
தமிழக முத்லவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா  இரண்டாவது  அலைப்பரவல் குறைந்து வருகிறது. இதனால் 11 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களி சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டுள்ளவை, ஆளுநரின்  உரையில் இடம்பெற்ற திட்டங்கள், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் குறித்து இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய  விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு  இதுகுறித்த அறிவிப்புகள் வெளியா வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்