சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்

வியாழன், 25 ஜனவரி 2018 (05:00 IST)
சென்னையின் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க உதவும் மெட்ரோ ரயில்கள் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இருப்பினும் ஒருசில பயணிகள் ஆபத்தான செல்பி எடுப்பதன் மூலமும், படிகளில் பயணம் செய்வதன் மூலமும் தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் படியில் பயணம் செய்வதை தவிர்க்கவும், ரயில் பயணத்தை அதிகளவு ஊக்குவிக்கவும் சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி ஜனவரி 26ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் இதோ:

ஜனவரி 26: மாலை 6 மணிக்கு பாடகர் காஷ்யாப் மகேஷ்-இன் பாட்டு நிகழ்ச்சி இடம்: வடபழனி மெட்ரோ ரயில் நிலையம்

ஜனவரி 27: சிம்கோ பூதியப்பா குழுவினர்களின் இசை  இடம்:ஆலந்தூர் ரயில் நிலைம்

ஜனவரி 28: மாலை 5.30 மணிக்கு இரு குழுவினர் இணைந்து நடத்தும் கலை நிகழச்சிகள் இடம்: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்

மேற்கண்ட ரயில் நிலையங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்