ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடக்க டாஸ்மாக் காரணமா? நெல்லையில் ஒரு வினோதம்

திங்கள், 5 ஜூன் 2017 (23:22 IST)
ஒரு ஆணை இன்னொரு ஆணும், ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் ஓரினச்சேர்க்கை கலாச்சாரத்திற்கு இந்திய அரசு இன்னும் அனுமதி தரவில்லை. இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் என்பதுதான் இதன் அதிர்ச்சி தகவல்



 


குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் கடையை நடத்தக்கூடாது என்று பல நாட்களாக நெல்லை மாவட்டம் திப்பணம்பட்டி,கொண்டலூர், பூவனூர் உள்ளிட்ட ஆறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக நேற்று ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இருவரும் திருமண உடையுடன் மாலை மாற்றி கொண்டனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காது. எனவே எதிர்காலத்தில் குடிக்கு அடிமையான ஆண், இன்னொரு ஆண்மகனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை இருக்கும்.” என்ற கருத்தை வலியுறுத்தவே இந்த நூதன நடத்தியதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஆணுக்கு ஆண் தாலிகட்டி, மாலை போட்டு நடந்த இந்த திருமணம் நல்லவேளையாக அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்