கடலூரின் நிலை என்ன?? பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படும் மக்கள்!!

வெள்ளி, 4 டிசம்பர் 2020 (13:36 IST)
கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம். 
 
வங்க கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்தும் ஒரே இடத்தில் நகராமல் நின்று கொண்டிருப்பதால் தொடர் மழை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த புயல் ராமநாதபுரம் அருகே 40 கிமீ தொலைவில் உள்ளதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு விரைவில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் தொடர் மழை காரணமாக கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர் -சிதம்பரம் சாலையில் காரைக்காடு பகுதிகள் வெள்ள நீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும், கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பு கருதி 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்