புயல் பாதிப்பை பார்வையிட சென்ற முதல்வரிடம் ஆசி பெற்ற மணமக்கள்!

வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:57 IST)
புயல் பாதிப்பை பார்வையிட சென்ற முதல்வரிடம் ஆசி பெற்ற மணமக்கள்!
சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையை புரட்டி எடுத்த நிவர் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் புயல் குறித்த பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று வருகிறார் 
 
அந்த வகையில் இன்று அவர் கடலூர் மாவட்டம் சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வந்தார். அப்போது திடீரென இன்று திருமணம் செய்து கொண்ட மணமக்கள் முதல்வரை சந்தித்து ஆசி பெற விரும்பினார்கள். இதனை அடுத்து அவர்களை அருகில் அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மனதார வாழ்த்தினார் 
 
இன்று திருமணம் முடிந்த மணமக்கள் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்ற போது முதல்வர் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி விட்டு வெறுங்காலுடன் நின்று ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்