சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

J.Durai
சனி, 28 செப்டம்பர் 2024 (18:48 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் கீழ ஒட்டம்பட்டி  பகுதியில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த   கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன்  பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 
 
இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று  ஆலையில் பேன்சி ரக  ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த பட்டாசு ஆலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வழக்கம்போல இன்று காலை பட்டாசு தயாரிக்க ஆயத்தப் பணியாக பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் வட இந்தியர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர் அப்போது ஊராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
 
தற்போது வரை வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் அருகில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
மேலும் உள்ளே வட இந்திய தொழிலாளர்கள் இருந்து வருவதாக தெரிவித்து வருகின்றனர் மேலும் தற்போது வரை பட்டாசு வெடித்து சிதறி வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 
 
மீட்பு பணி முழுமை அடைந்த பின்பு பலி குறித்த தகவல் தெரிவிக்கப்படுவதாக காவல்துறை என தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்