இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை – நீதிமன்றம் முக்கிய உத்தரவு !

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (10:29 IST)
இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதால் இந்திய மருத்துவர்கள்  வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது நீதிமன்றம்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மதுரையை சேர்ந்த லில்லி என்ற மருத்துவர் அனுமதி இல்லாமல் அதிக நாட்கள் தங்கி இருந்ததாகக் கூறி அரசு அவர் பதவியைப் பறித்தது. இந்த பதவிப்பறிப்பை ரத்து செய்து லில்லிக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனக் கூறி லில்லியின் கணவர் அலெக்சாண்டர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி அரசு மருத்துவரான லில்லி அதிகநாள் வெளிநாட்டிலிருந்தது நிரூபனமாகியுள்ளது. அதனால் அந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி அவர்கள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும் இந்த தீர்ப்பில் ’இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும்போது, அரசு மருத்துவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதைத் தடுக்க அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். மேலும் இதை  மீறுபவர்களை அரசு ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்