யானைகளைக் காட்டி நிதி திரட்டி மோசடி செய்த தனியார் அமைப்புகள் –நீதிமன்றம் அதிரடி !

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (15:07 IST)
தனியார் கட்டுப்பாட்டில் இருந்த காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான யானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சி காமகோடி பீடத்திற்கு சொந்தமாக சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 பெண் யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளை பவுண்டேஷன் இந்தியா என்ற அமைப்பு 2016 ஆம் ஆண்டு முதல் கட்டுபாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த யானைகளை முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறி விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில் ‘ இந்த யானைகளை வைத்து அனுமதியின்றி யானைகள் முகாம் நடத்தி வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து வசூல் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதை ஏற்று விசாரித்த நீதிமன்றம் மூன்று யானைகளையும் திருச்சி எம்ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்