கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பன்னீர்செல்வம் அவர்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி அவர்களா? என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து விடிய விடிய நடந்த பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் இறுதியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அறிவிக்கப்பட்டது
இதற்காக தனியாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வில்லை என்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்களே இவ்வாறு பின்பற்றாமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் கூறி வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சிகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை ஜனவரி 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது