தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்து சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை பார்வையிட்டார்.
பிறகு வேளாண் மசோதா குறித்து பேசிய அவர் “விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என்பதாலேயே வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் இடைத்தரகர்கள் அதிகமாக இருப்பதால் அதை அகற்ற மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. விருப்பப்பட்டால் மட்டுமே விவசாயிகள் வேளாண் சட்டத்தை பயன்படுத்தலாம்” என கூறியுள்ளார்.