ஆன்லைன் சூதாட்டம்; தமன்னா, கோலியை கைது செய்ய முடியாது! – நீதிமன்றம் கறார்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (10:51 IST)
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் குறித்த வழக்கில் கோலி, தமன்னாவை சேர்க்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.

சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பலர் இந்த விளையாட்டுகளில் பணத்தை இழந்துவிடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவும், அதற்கு விளம்பரம் நடித்த கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணையில் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த தளத்தையும் முடக்க முடியாது என தெரிவித்துள்ள மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை இணையதள சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்ய விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை மட்டுமே எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்