பெண் காவலருக்கு ஸ்டேஷனிலேயே வளைகாப்பு… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (10:41 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மகளிர் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தி வைத்துள்ளார் இன்ஸ்பெக்டர் கற்பகம்.

விஜயகுமார் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி மீரா பர்கூர் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இருவரும் பணி காரணமாக கிருஷ்ணகிரியில் தங்கி இருக்க, அவர்களின் பெற்றோர் திருச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் மீரா 7 மாத கர்ப்பமாக இருக்க, வளைகாப்பு நடத்த அவர்களது பெற்றோர்களால் ஊரடங்கு காரணமாக வர முடியவில்லை. இதனால் மீரா மனமுடைந்து விடக் கூடாது என நினைத்த பர்கூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கற்பகம், ஸ்டேஷனிலேயா மீராவுக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்து, பாரம்பர்ய முறைப்படி சீர்வரிசை செய்து ஐந்து வகை சாதத்தோடு வளைகாப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்