கூம்பு வடிவ ஒலி பெருக்கிக்கு நீதிமன்றம் தடை...

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (11:17 IST)
தமிழகத்தில் பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 
தமிழகத்தில் பல வருடங்களாக துக்க மற்றும் சுப காரியங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
 
ஆனால், அதிலிருந்து வரும் காதை பிளக்கும் சத்தம் பொதுமக்களுக்கு குறிப்பாக வயதானோர், அதிகாலையில் எழுந்து படிக்கும் மாணவ, மாணவிகள்  ஆகியோருக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக பல வருடங்களாக புகார் கூறப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், திருச்சி அற்புத குழந்தை யேசு தேவாலயத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கு பயன்படுத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 
 
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழகத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதித்தார். குழந்தைகள், பெண்கள், வயதானோர் நலன் கருதி இந்த தீர்ப்பை வழங்குவதாக கூறிய நீதிபதி, கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தப்படாமல்  மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
 
வேறொருவர் தொடர்ந்த பொது நல வழக்கில், தமிழகத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படத்தகூடாது என 2016ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆனாலும், கோவில் உள்ள வழிபாட்டு தளங்களில் கூம்பு வடிவ ஒலி பெருகி பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்