ஜூன் ஜூலையில் உச்சத்தைத் தொடும் கொரோனா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட எய்ம்ஸ்!

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (07:47 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இப்போது அதிகரித்துக் கொண்டே செல்லும் வேளையில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் உச்சத்தைத் தொடும் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 52,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 1,783 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. 15,266 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை முன்னிலையில் உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து பேசியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலோரியா தெரிவித்துள்ளார். அதில் ‘ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடக்கூடும். ஆனால், அதைத் தவிர்க்க பல்வேறு மாற்று வழிகள் உள்ளன. ஊரடங்கை எவ்வளவு நீட்டிக்க முடியுமோ அவ்வளவு நல்லது. கொரோனா தொற்று எவ்வளவு காலம் இருக்கும் எனக் கணிக்க முடியாது. ஜூன் மாதத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்