சிங்கார சென்னைக்கு சிக்கலாய் உருவெடுக்கும் கொரோனா 2 ஆம் அலை?

Webdunia
புதன், 12 மே 2021 (09:09 IST)
கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் சுகாதாரத்துறை சென்னையில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 29,272 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 14,38,509 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 29,272 பேர்களில் 7,466 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே சென்னையில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆம், சென்னையில் தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டால் அதில் 26 பேருக்கு தொற்று உறுதியாகிறது. கடந்த மார்ச்  தொற்றுப்பரவல் விகிதம் 3.42 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஏப்ரலில் தொடர்ந்து அதிகரித்து தற்போது 26.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்