தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு நிதியாக அதிகம் தர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை அடுத்து நிதிகள் தமிழக அரசுக்கு குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
அந்த வீடியோவில் தயாநிதிமாறன் கூறிய போது அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் மக்களுக்கு பண உதவி செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் மாநில அரசும் மத்திய அரசும் நிதி கேட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களே இங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது பிச்சை எடுக்கும் மக்களிடம் பிச்சை பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் அரசு ஒரே அரசு இங்குதான் உள்ளது என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது